நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில், நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதுபோக, தூய்மைப் பணிகளுக்காக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர்.
ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கிய தொழிற்சாலை - கொட்டும் மழையில் பணியாளர்கள் போராட்டம் - Nilgiris district news in tamil
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களை திடீரென வேலையை விட்டு நிறுத்தியதால் கொட்டும் மழையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களை திடீரென பணியில் இருந்து நிறுத்தியதால், தொழிலாளர்கள் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஆலை நிர்வாகம், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், 15 பேருக்கு தற்போது வேலை வழங்குவதாகவும், மீதமுள்ளவர்களுக்கு விரைவில் பணி வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:9 மாதங்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம் -உதகை மலை ரயில் சேவை தொடக்கம்