இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்ய எவ்விதமான கட்டுபாடும் விதிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப கூட்டம் சேராமல் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளில், உழவர் சந்தையின் விலைப் பட்டியலை விட மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் வருவாய் துறையினர், துணை வட்டாட்சியர், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காய்கறிகள் அதிகமான விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.