தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் ஏற்படும் தொடர் விபத்துகள் - வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு! - traffic

நீலகிரி: குன்னூர் பகுதியில் வெளி மாநிலத்து வாகனங்கள் அதிகளவில் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விதிமுறைகளை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டனர்.

விழப்புணர்வில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் துறை

By

Published : May 12, 2019, 8:15 AM IST

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதிகளில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான வாகனங்கள் மலைப்பாதையில், வந்து செல்கின்றன. சமீப காலமாக கேரளா, கர்நாடகா, ஆந்திர ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும், டெம்போ டிராவலர்ஸ் தொடர்ந்து குன்னூர் மலைப்பாதையில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் இந்த வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டுநர்களுக்கு குன்னூர் போக்குவரத்துக் காவல் துறை, இலவச வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், இரண்டாவது கியரில் மட்டுமே மலைப்பாதையில் இறங்க வேண்டும்; சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பன உட்பட பல்வேறு விதிமுறைகளைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details