நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழையின் சீற்றம் குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாத்தலங்களில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
இம்மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முதல்கட்ட சீசனும்; அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டாம் கட்ட சீசனும் நிலவி வருகிறது. முதல் கட்ட சீசனில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதால், சுற்றுலாத்துறை சார்பாக கண்காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.