நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மலரும். ஸ்டாபிலான்தஸ் மினியேச்சர் தாவர இனத்தைக் கொண்ட இந்த குறிஞ்சி மலர்கள் குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரியில் தற்போது பூத்துள்ளது. அது அங்குவரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதேபோல், குறிஞ்சி மலர் கடந்த மாதம் லேம்ஸ்ராக், கல்லட்டி, கோத்தகிரி மலைப் பகுதிகளில் மலர்ந்துள்ளது. பூங்காவில் குறிஞ்சி மலர்களின் நாற்றுக்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் இலைகள் அடர்த்தியாக உள்ளதால் வீடுகளில் வேலியாக வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.