நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்படுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குன்னூரில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை 41 அடியை எட்டியுள்ளது.
மேலும், நேற்று இரவு பெய்த கனமழையில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் அருகே ராட்சத மரம் சாலையின் நடுவே விழுந்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றாமல் காலம் கடத்திவருகின்றனர். இந்நிலையில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகச் செல்வதால் சாலையின் மறுபுறம் ஓட்டுநர்களுக்கு தெரியாமல் இருப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.