தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளை கவரும் குன்னூர் மலை ரயில் ஓவியங்கள் - coonoor tourism

நீலகிரி: குன்னூர் மலை ரயில் பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், விலங்குகள் உட்பட ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அதைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் குன்னூர் மலை ரயில் ஓவியங்கள்

By

Published : May 9, 2019, 11:59 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. இங்கு சீசனை காணவரும் சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் குன்னூர் மலை ரயில் ஓவியங்கள்

அங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் நிலையங்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், விலங்குகள், பறவைகள் ஆகியவை தத்ரூபத்தோடு ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இதனால் தற்போது ரயில் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.

மேலும் குடும்பத்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துவருகின்றனர். இந்த ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவமாக உள்ளது என அங்கு சுற்றுலா மேற்கொண்ட பயணி விஜி என்பவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details