தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வனத்தில் நடப்பதே எனக்கு கிரிவலம்’ - தபால்காரர் சிவன்

குன்னூர் அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தபால் கொடுத்து வந்த தபால்காரர், தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றும்கூட அப்பகுதிக்குச் சென்று பழங்குடியின மக்களைச் சந்திப்பது மகிழ்ச்சியாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 15, 2023, 3:50 PM IST

Updated : Mar 15, 2023, 4:23 PM IST

ஓய்வுபெற்ற தபால்காரர் சிவன்

நீலகிரி: குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தபால்காரர் சிவன். இவர் கடந்த பத்து வருடங்களாக தினமும் 15 கி.மீ. தூரம் நடந்தே சென்று பழங்குடியின மக்களுக்கு தபால்களை பட்டுவாடா செய்து வந்தார். அப்போது வனப்பகுதிகளில் உள்ள பாறைகளில் அமர்ந்து தியானங்களை மேற்கொள்வதையும், வனவிலங்குகள் தாக்காமலிருக்க ஸ்லோகங்களை செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன் அவர் ஓய்வு பெற்றார். இருப்பினும் இந்த பகுதி பழங்குடியின மக்களைச் சந்திக்க அவர் மீண்டும் 15 கி.மீ., தூரம் நடந்தே வனப்பகுதி வழியாக சென்று வருகிறார். அவர்களிடம் நலம் விசாரித்ததுடன், நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்து வருகின்றார். குடும்பம் போல் பழகிய பழங்குடியின மக்கள் நலம் பெற மாதம் தோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் இவர் தற்போது வனப்பகுதி வழியாக நடந்து செல்வதே தனக்கு கிரிவலம் சென்றது போல் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசு கொடுத்த பயிற்சியால் வெளிவந்த 'ஈழக்காசு' - மதுரை ஆசிரியர் மகிழ்ச்சி!

Last Updated : Mar 15, 2023, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details