நீலகிாி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான பா்லியாா், காட்டோி, சேலாஸ், அருவங்காடு, எடப்பள்ளி போன்றப் பகுதிகளில் காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், பகலையே இரவாக்குவதுபோல் கடுமையான மேகமூட்டம் ஏற்பட்டுள்ளதால் கடும் குளிா் நிலவி வருகிறது.
பகலையே இரவாக்குவது போன்ற மேகமூட்டம்... நீலகிரியில் பலத்த மழை! - நீலகிரியில் பலத்த மழை
நீலகிாி: குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமம் அடைந்துள்ளனர்.
![பகலையே இரவாக்குவது போன்ற மேகமூட்டம்... நீலகிரியில் பலத்த மழை! மழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10244970-498-10244970-1610657460057.jpg)
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான மேகமூட்டத்தால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் குன்னூர் - ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனா்.
மேலும், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல், மஞ்சூா் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால், அங்கிருந்து கிண்ணக்கொரை கிராமத்திற்குச் செல்லும் சாலையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளன. கிராமத்திற்குச் செல்லும் பாதை தடைபட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினா் பாறைகளை அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.