நீலகிரி: குன்னூர் வெலிங்டன் பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 13 பேர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டனிலிருந்து கோயம்புத்தூர் சூலூருக்கு அவசர ஊர்தி மூலமாக எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர், விமான படைத்தளத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
முன்னதாக, உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவப் பயிற்சி பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ராணுவ அலுவலர்கள் மரியாதை செலுத்தினர்.
மக்கள் அஞ்சலி
அங்கிருந்து கோயம்புத்தூர் புறம்படும்போது, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குன்னூர் பிளாக் பிரிட்ஜ், வெலிங்டன், குன்னூர், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் நின்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி மேலும், நஞ்சப்புரம் சத்திரத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர் குறித்து நிர்வாக அலுவலர் அருள்ஜோதி ரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் குன்னூர் வெலிங்டன் காவலர்கள் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174 இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டு, விசாரணையை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லிக்கு புறப்பட்ட வீரர்களின் உடல்கள்!