தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம் - coonoor Other State Labour Protest

நீலகிரி: குன்னூரில் உணவுப்பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம் .  குன்னூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்  நீலகிரி வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்  Nilagiri Other State Labour Protest  coonoor Other State Labour Protest  Other State Labour Protest
coonoor Other State Labour Protest

By

Published : Apr 17, 2020, 1:09 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிங்கார தனியார் தேயிலைத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 25 குடும்பங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் உணவுப் பொருள்கள் இன்றி தவித்துவருகின்றனர்.

இதனால், அங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் திடீரென போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், "நியாயவிலைக் கடைகளில் எங்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்குவதில்லை. இதனால், சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று பொருள்களை வாங்கிவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

உணவுப்பொருள்களுக்காகப் போராட்டம் நடத்தும் வடமாநிலத் தொழிலாளர்கள்

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வட்டாட்சியர் குப்புராஜ் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தி அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்கள், காய்கறிகளை குடியிருப்புப் பகுதிக்கு வாகனங்கள் மூலம் விநியோகம் செய்துதருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்துசென்றனர்.

மேலும் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அனைவரும் சமூக இடைவெளிவிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உணவின்றி சாலையில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தவர்கள்: உதவுமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details