தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி ஒரு உயிர்போவதை அனுமதியோம்! - சீரற்ற சாலையால் சிரமப்படும் கிராமங்கள்!

நீலகிரி: எட்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்கக்கோரி குன்னூரை அடுத்த மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

குன்னூர் செய்திகள்
மோசமான சாலைகளால் அவதியுறும் சோலாடா மட்டம் கோடமலை கிராம மக்கள்

By

Published : Jan 29, 2020, 6:26 PM IST

குன்னூர் அருகேயுள்ள சோலாடா மட்டம், கோடமலை கிராமங்களைச் சுற்றி சுமார் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். தேயிலைத் தோட்டங்கள் இந்தக் கிராமங்களைச் சூழ்ந்துள்ளதால், இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்தத் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்துவருகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த மலைவாழ் கிராமங்களின் சாலைகள் சீரமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் மோசமான சாலை வசதி காரணமாக, இரண்டு நோயாளிகள் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்‌.

மோசமான சாலைகளால் அவதியுறும் சோலாடா மட்டம் கோடமலை கிராம மக்கள்

அவசர சேவையான 108 ஆம்புலன்ஸ், தனியார் வாகனங்கள் இந்த ஊர்களின் மோசமான சாலை வசதி காரணமாக கிராமங்களுக்குள் வந்துசெல்ல முடிவதில்லை‌. எனவே தங்களுக்கு விரைவில் சாலைவசதிகள் அமைத்துக் கொடுத்து நிரந்தரத் தீர்விற்கு வழிவகுக்கவேண்டுமென, ஊரில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வண்டிச்சோலை பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுகள் தயார்படுத்தும் பணி தீவிரம்..!

ABOUT THE AUTHOR

...view details