mettupalayam highway car fire: நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ், இவர் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் மேட்டுப்பாளையத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது மரப்பாலம் பகுதியில் வந்தபோது திடீரென கார் தீப்பிடித்தது. அப்போது காரிலிருந்த அனைவரும் வெளியேறி பொருள்களை துரிதமாக வெளியில் எடுத்தனர்.
தொடர்ந்து கார் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்தது. அவ்வழியாக மாற்று வாகனத்தில் வந்த ஓட்டுநர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி கைதின் பின்னணி என்ன?