நீலகிாி மாவட்டம் குன்னுாா் சுற்றுவட்டாரப் பகுதியான கரோலினா மவுண்ட்பிளசண்ட் ரயில்வே குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.
ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பணியாளா்கள் பீதி
நீலகிாி: குன்னூர் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பணியாளா்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், வனத்துறையினா் தீப்பந்தம் ஏந்தி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் நேற்றிரவு (9.9.2019) இரவு 9 மணிக்கு ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலா வந்ததால், குடியிருப்பின் அருகே நின்றிருந்த பொதுமக்கள் வீட்டிற்குள் ஒட்டம் பிடித்தனா். இதனையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா் தீப்பந்தம் கொளுத்தி சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.