நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் பகுதியாகும். இப்பகுதியில் சுற்றுப்புற இடங்கள் ஏராளமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் லெவல் கிராசிங் அருகே இடைச்சேரி பகுதியில் உள்ள வருவாய்த் துறையின் நிலங்ககளை ஆக்கிரமிப்பிலிருந்து தடுக்கவும், நிலச்சரிவிலிருந்து காப்பாற்றும் நோக்கிலும் 300 அரிய வகை பழ மர நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்றன.
மரங்களை நடவு செய்யும் இளைஞர்கள் ஏற்கெனவே குன்னூரை பசுமையாக மாற்ற ஜெயின் இளைஞர்கள் நல சங்கம் சார்பில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அவைகளை பாரமரித்துவருகின்றனர். இந்நிலையில், குன்னூர் பகுதிகளில் அரிய வகை பழ மரங்களான மங்குஸ்தான், ரம்புட்டன், பீச் பிளம்ஸ் உள்ளிட்ட சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை ஜெயின் நல சங்கத்தினர் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த பெண்மணி