தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுகள் தயார்படுத்தும் பணி தீவிரம்..!

நீலகிரி: குன்னூர் காட்டேரி பூங்காவில் கோடை சீசனையொட்டி மலர் நாற்றுகள் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குன்னூர் காட்டேரி பூங்கா மலர் நாற்றுகள் பணி தீவிரம் காட்டேரி பூங்கா மலர் நாற்றுகள் பணி தீவிரம் குன்னூர் காட்டேரி பூங்கா Coonoor Kattery park Coonoor Kattery park Flower seedlings work Kattery park Flower seedlings work
Kattery park Flower seedlings work

By

Published : Jan 23, 2020, 6:31 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்கா மலைகள், நீர் வீழ்ச்சி, தேயிலை எஸ்டேட் என பசுமையான சூழலில் ரம்மியமான இயற்கை காட்சிகளுடன் அமைந்துள்ளது. இதனால், இங்கு திருமண ஆல்பத்திற்கான புகைப்படம், வீடியோக்கள் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் அதிகம் வருகை தருகின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பூங்காவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள கோடை சீசனுக்காக பிப்ரவரி மாதம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இதற்கான விதைகளை பூங்காக்களில் உள்ள நர்சரிகளில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

குன்னூர் காட்டேரி பூங்கா

மேலும் பூங்காக்களில் விதைக்கப்பட்ட விதைகள் , பனிப்பொழிவில் இருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை போர்த்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:

காட்டேரி பூங்காவிற்கு குவியும் புகைப்படக் கலைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details