நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரியில் ஃபிட்டர், மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் , வெல்டர் உட்பட 9 தொழிற்பயிற்சி பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் உருவாக்கியுள்ள படைப்புகளை முதல் முறையாக காட்சிப்படுத்தினர். இங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி, புத்தகங்கள், வரைபட கருவிகள், காலனி, பேருந்து பாஸ், போன்றவைகள் இடம் பெற்றன.
தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு! - iti students
நீலகிரி: அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவர்களின் அரிய வகையான படைப்புகள் கண்காட்சி குன்னூரில் நடைபெற்றது.
தொழிற் பயிற்சி கல்லூரி
இதுகுறித்து உதவி பயிற்சி அலுவலர் ஸ்ரீ குமார் கூறுகையில், "நமது நாட்டின் சராசரி வயது 28ல் இருந்து 30 வயது அதிகமான மக்கள் இளைஞர்களாக இருக்கிறார்கள். இனிவரும் 20 ஆண்டுகளில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் திறமையான இளைஞர்களை அனுப்பும் நாடாக நமது நாடு விளங்கப்போகிறது. ஆகவே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், எல்லோரும் தொழிற்கல்வி பயிற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு வேண்டிதான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி" என்றார்.
Last Updated : Jul 13, 2019, 4:41 PM IST