குன்னூரில் இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாஹூ பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது, பல்வேறு நலத்திட்டங்களையும், குறிப்பாக பழங்குடியின கிராமங்களில் நிறைய நலத்திட்டப் பணிகளையும் செய்துள்ளார்.
இண்ட்கோசர்வ் மேலாண்மை இயக்குநராக பதவியேற்ற முன்னாள் ஆட்சியர்! - Former Nilgiris District Governor Supriya Sahu
நீலகிரி : குன்னூர் இண்ட்கோசர்வ் -வின் மேலாண்மை இயக்குநராக முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாஹூ பதவியேற்றுக் கொண்டார்.
coonoor inco serve new director
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இண்ட்கோசர்வ், மொத்தம் 14 தொழிற்சாலைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சிறு, குறு, தேயிலை விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் இருந்து பயிர் செய்யும் தேயிலைகளை, இந்த தொழிற்சாலையில் கொடுத்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.