நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசன்கள் மட்டும் இன்றி இங்கு உள்ள இயற்கை அழகைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவது வழக்கமான ஒன்று. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் இரயில் சேவை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் தண்டவாளத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மரங்கள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன.