தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் கனமழையால் சாலையில் மண் சரிவு - சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

நீலகிரி: குன்னூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையினால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் சரிந்த மண்ணை அகற்றும் பணித் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குன்னூர் கனமழையால் சாலையில் மண் சரிவு

By

Published : Nov 19, 2019, 9:58 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் ஒரு வார காலமாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவும் குன்னூர் பகுதியில் கன மழை பெய்த காரணத்தினால், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து, சாலையில் விழுந்த மண், ராட்சத பாறைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணித் தீவிரமாக நடைபெற்று வருகிறது .

சாலையில் மண் சரிவை அகற்றும் பணி

சாலையில் வழிந்து ஓடிய நீர், கல்வெட்டுகளை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சீரமைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஃபாத்திமா லத்தீப் சமூகத்தின் அறிவாளி' - வழக்கறிஞர் அருள்மொழி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details