நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் மண்சரிவுகளும், மரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோத்தகிரி, குன்னூர், வெலிங்டன் ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்தது.
வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் இதனைத்தொடர்ந்து வெலிங்டனில் உள்ள அண்ணா நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகளில் இருந்த டீவி, வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்களும் சேதமடைந்தது.
இதுதொடர்பாக குன்னூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மீட்புக்குழுவினர் சேதமடைந்த பகுதிகளைச் சீர் செய்தனர். மேலும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்திவருகிறார். மேலும், கனமழை காரணமாக பாதுகாப்பு மையங்களும் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பட்டப்பகலில் குளியலறை ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி!