நீலகிரிமாவட்டம் குன்னூர் தூதூர்மட்டம் அரசினர் மாணவர் விடுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி எதுவும் தற்போது வரை கிடைப்பதில்லை. மேலும் கழிவறை உறங்கும் அறை உள்ளிட்டவை சுகாதாரமில்லாமல் உள்ளது.
உணவு சுகாதாரம் இன்றி வழங்கப்படுவதாவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், விடுதிப் பணியாளர், சமையலர், துப்புரவு பணியாளர் உள்ளிட்டோர் இல்லாமல் ஒருவர் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.