நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவைத் தடுக்கும் வகையில், ஆங்கிலேயர் காலத்தில், காட்டு சூரியகாந்தி விதைகள் குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன. வறட்சி காலங்களில் பூத்துக் குலுங்கும் இந்தப் பூக்களால், மண்ணின் உறுதித்தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பரவலாகப் பூத்துக் குலுங்குகின்றன.