நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் அண்மை காலமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், செடி கொடிகள் எளிதில் தீப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குன்னூர் பகுதிகளில், நான்கு இடங்களில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது.
கோடை வறட்சியால் குன்னூர் காடுகளில் தீ - தீ
ஊட்டி: குன்னூரில் கோடை வெப்பத்தால், அடுத்தடுத்த நான்கு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை பல மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
குறிப்பாக குன்னூர் ஊட்டி செல்லும் சாலை, ரயில் நிலையம் பகுதி, வண்டிச்சோலை சரவண மலை பகுதி போன்ற பகுதிகளில் தீப்பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீப்பற்றிய இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். குன்னூர் காடுகளில் தொடர்ந்து தீப்பற்றி எரிவதை வனத்துறை கண்காணித்து தீக்கோடுகள் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.