நீலகிரி:கொலக்கம்பை அருகே மூப்பர்காடு பகுதியில் ஓ லேண்டு என்ற தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று (ஜூலை 12) தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, குன்னூர் ரேஞ்சர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.
குன்னூர் அருகே மின்சாரம் தாக்கி யானை, பன்றி உயிரிழப்பு - மின்சாரம் தாக்கி யானை பன்றி உயிரிழப்பு
குன்னூர் அருகே எஸ்டேட் ஒன்றில் மின்சாரம் பாய்ந்து யானை, பன்றி ஆகியன உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யானை
மின்கம்பி ஒன்று தாழ்வாக தொங்கியிருந்ததும் அதை தொட்டதால் யானை இறந்துள்ளதும் இதேபோன்று, பன்றியும் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளதை கண்டனர். இரவு நேரம் என்பதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாலும் எத்தனை வனவிலங்குகள் இறந்துள்ளன என்று வனத்துறையினரால் கணிக்க முடியவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யானையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. வனத்துறையை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்