நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்புத் துறையினர் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பட்டாசுகளை தொலைவிலிருந்து வெடிக்க வேண்டும் எனவும் பட்டாசுகளை வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிந்து வெடிக்க கூடாது எனவும் தொட்டியில் தண்ணீர் வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது