நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் பல்வேறு குடியிருப்புகள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதில் ஐந்து வாகனங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏழு வாகனங்கள் எங்கு இருக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும், அந்த பகுதிக்கு மருத்துவ உதவி, நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.