நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்துவந்த கனமழையால் தண்டவாளங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்து ரயில்சேவை நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 நாட்கள் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலைரயில் இயக்கப்பட்டது.
மலைரயில் பாதையில் உள்வாங்கிய பூமி: அந்தரத்தில் தொங்கும் தண்டவாளங்கள்
ஊட்டி: குன்னூர் மலைரயில் பாதை ஐந்தடிக்கு உள்வாங்கியதில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது.
rail track
பின் மீண்டும் கனமழை பெய்துவருவதால் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை டிசம்பர் 7 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டது. தற்போது கே என் ஆர் என்னும் பகுதியில் மலைரயில் பாதை ஐந்தடிக்கு உள்வாங்கியுள்ளது. இதனால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியப்படி உள்ளது. மேலும் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் விரைந்து இதனை ஆய்வு செய்து சீரமைத்து மலைரயிலை இயக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது