கோடை காலம் தொடங்கிவிட்டதால் பல அதிசயங்கள் நிறைந்த குன்னூரை கண்டு ரசிக்க வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால் சொகுசு விடுதிகளை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சொகுசு விடுதிகளில் விலை அதிகமாக இருந்தாலும், கூடுதல் கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சொகுசு விடுதியில் ரகசிய கேமராக்கள் -சுற்றுலாப் பயணிகள் புகார் - ரகசிய கேமரா
நீலகிரி: குன்னூரில் இருக்கும் சொகுசு விடுதிகளில் முறைகேடுகள் நடப்பதாக காவல்துறையினரிடம் சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பகுதியில் இருக்கும் சொகுசு அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்த போதிலும், காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. முறைகேடாக நடத்தப்பட்டு வரும் சொகுசு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுதியை நடத்துபவர்களுக்கு உடந்தையாக உள்ளனர்.
எனவே, அனுமதியில்லாமல், அதிக வசூல் செய்யும் விடுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.