தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெலிகாப்டர் விபத்து: மீட்க உதவிய கிராம மக்களுக்கு விமான படை பாராட்டு - ஹெலிகாப்டர் விபத்து

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது வீரர்களை மீட்க உதவிசெய்த நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு விமான படை பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

விமானப்படை பாராட்டு
விமானப்படை பாராட்டு

By

Published : Dec 11, 2021, 8:37 AM IST

நீலகிரி: வெலிங்டன் ராணுவ முகாமில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் வந்த ஹெலிகாப்டர், குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணமடைந்தனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட வீரர் ஒருவருக்கு பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்தின்போது நஞ்சப்ப சத்திரம் மக்கள், தீயணைப்பு, காவல் துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பாராட்டுச் சான்றிதழ்

இதன் காரணமாக காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு நஞ்சப்ப சத்திரம் மக்களைச் சந்தித்து, அவர்களின் சேவையைப் பாராட்டினார்.

விமான படை பாராட்டு

இந்நிலையில் வீரர்களை மீட்க உதவிசெய்த நஞ்சப்ப சத்திரம் மக்களுக்குப் பாராட்டு சான்றிதழை விமான படை அலுவலர்கள் வழங்கினர்.

இதையும் படிங்க:விடைபெற்றார் பிபின் ராவத்: ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கு

ABOUT THE AUTHOR

...view details