நீலகிரி மாவட்டம் குன்னூர் - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் உலாவரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில நாட்களாக காட்டெருமைகள் கூட்டம் இப்பகுதியில் அதிகரித்து வந்த நிலையில் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை சாலை ஓரத்தில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்றுவருகின்றனர்.
காட்டெருமையின் அருகே சென்று அங்கு வருபவர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனால் காட்டெருமை அவர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது. மேலம் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் அவ்வழியாகச் சென்று வர அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.