நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டெருமை சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காட்டெருமையால் அரண்டு ஓடும் மக்கள் - வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
நீலகிரி : குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்களாக ஒற்றை காட்டெருமை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
coonoor-byson-problem
இந்த காட்டெருமை உமரிக்காடு, வண்ணாரப்பேட்டை மயான பகுதி ஆகிய இடங்களில் சுற்றி வருவதால் இறந்தவர்களை அவ்வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர்பலி ஏற்படும் முன் உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.