தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசை ஆசையாய் வந்த சுற்றுலாப் பயணிகள்! இப்படியா ஆவது?

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பல மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

குன்னூரில் பல மணி நேரம் காத்திருப்பால் படகு சவாரியை வெறுத்த பயணிகள்

By

Published : May 20, 2019, 9:31 AM IST


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாத இறுதியில் மலர் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு, இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.

மலர் கண்காட்சிக்காக உதகைக்கு வரும் சுற்றுலாப்

பயணிகள் குன்னூரில் உள்ள பூங்காவிற்கு படையெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், அங்கு படகு சவாரி செய்ய, இயக்குவதற்கு போதிய ஆட்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தாவது, "சிறுவர் பூங்காவில் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் சிறுவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இங்கு உள்ள படகை இயக்குவதற்கு, போதிய ஆட்கள் இன்மையால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய வெகு நேரம் நீண்ட வரிசையில் நின்று சவாரி மேற்கொள்கின்றனர். மேலும், பலர் படகு சவாரி செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

ஆகையால் அடுத்த வாரம் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக சிம்ஸ் பூங்காவில் முறையான கழிவறை, குடிநீர் அதிக படகுகள் சிறுவர் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்து தர வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்கா

ABOUT THE AUTHOR

...view details