நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் தாமஸ்(21). கல்லூரி மாணவரான இவர், தனது இருச்சக்கர வாகனத்தில், குன்னூர்-ஊட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார்.
பெட்ரோல் நிரப்பிவிட்டு புறப்பட முயன்ற போது இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள், தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். தீயை அணைக்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.