வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னுாரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்படுவதுடன், மரங்கள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
தொடர் மழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்து, போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால் இன்று (அக்.21) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.