நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அந்தவகையில், அப்பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதியில் உலாவரும் கரடி! சிசிடிவி காணொலி - Coonoor Tourist
நீலகிரி: குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டை குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை கரடி ஒன்றின் நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
bear
இந்நிலையில், குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டை குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம்-பிடித்துள்ளனர். கரடியின் நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காணொலி சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.
இதனிடையே, கரடியைப் பிடித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.