தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.என். ரவி மகள் திருமணம்: நிறம் மாறிய ஆளுநர் மாளிகை! - உதகையில் பழமையான ஆளுநர் மாளிகை

உதகையில் உள்ள பழமையான ஆளுநர் மாளிகையின் நிறத்தை தனது மகள் திருமணத்திற்காக ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றியிருப்பதாகச் சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது.

உதகை ஆளுநர் மாளிகை
உதகை ஆளுநர் மாளிகை

By

Published : Feb 21, 2022, 6:28 PM IST

நீலகிரி:தமிழ்நாட்டில் சென்னை, உதகையில் ஆளுநர் மாளிகைகள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையை தமிழ்நாடு பொதுப்பணித் துறை பராமரித்துவருகிறது. இந்த மாளிகை வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அதன் சுவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு காட்சி அளித்துவந்தது.

தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பலரும் இந்த மாளிகையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போதைய ஆளுநராக உள்ள ஆர்.என். ரவி தனது மகள் திருமணத்திற்காக ராஜ்பவனின் நிறத்தை மாற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பச்சை நிறத்தில் இருந்த சுவர் பகுதிகள் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

உதகை ஆளுநர் மாளிகை

ஆளுநர் மகள் திருமணம் இன்று (பிப்ரவரி 21) இரவு நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உதகை ஆளுநர் மாளிகை

இதையும் படிங்க: 'அறநிலைய ஊழியர்களை அயல்பணியில் நியமித்ததில் சட்டவிரோதம் இல்லை'

ABOUT THE AUTHOR

...view details