நீலகிரி: உதகை நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளில், கரோனா பெருந்தொற்று காலத்தில் நடத்தப்பட்ட வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்காக ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 650 வீதம் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சுமார் 250 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக கரோனா கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு மாதம் கூட ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.