'மலைகளின் அரசி' என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகள், சில்வர் அருவி, கொடைக்கானல் ஏரி, பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகை, பூங்காக்கள், தேயிலைத் தோட்டம், குதிரை சவாரி ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலமாகும். கோடை காலத்தில் இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. தற்போது, அங்கு கண்களுக்கு விருந்தாக ஜகரண்டா பூக்கள் பூத்துள்ளன.
குன்னூரில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண பூக்கள்! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் - conoor
நீலகிரி: குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப்பகுதியில் ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலங்கத் தொடங்கியுள்ளன. இதன் அழகைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்களை புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். இவற்றின் சீசன் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும்.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் விதவிதமான வண்ண மலர்ச்செடிகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் தோட்டக்கலைக்குச் சொந்தமான பூங்காக்கள் அனைவரையும் ஈர்க்கின்றன.
இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த மலர்களின் அழகையும், அவற்றில் தேனீக்கள், தேன் உறிஞ்சும் காட்சியையும் ஆர்வத்துடன் காணும் சுற்றுலாப் பயணிகள், அவற்றை நினைவுகூறும் வகையில், புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இங்கு பூத்துக்குலுங்கும் ஜகரண்டா மலர்வகைகள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டதாகும். இவற்றின் சீசன் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும். இதனால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.