நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினியைத் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தானியங்கி கை கழுவும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
சந்தைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! - நீலகிரி கொரோனா
நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
![சந்தைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! நீலகிரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:57:08:1593970028-tn-nil-2-05-coonoor-market-people-corona-test-tn-10012-05072020214345-0507f-02899-552.jpg)
இச்சூழலில் சந்தைப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வருவதால், தொற்று ஏற்படும் அபாயமுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில், கன்சர் எர்த் எனும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிருமி நாசினி வழங்கப்பட்டு, தெர்மல் கருவி மூலம் முழு பரிசோதனை செய்த பிறகே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அவ்வாறு பரிசோதிக்கப்படும் நபர்களின் முழு விவரம் பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு சிறப்பாக செயல்படும் குன்னூர் நகராட்சிக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.