நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 700 ஆட்டோக்கள் இயங்கிவருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் உதகை நகரத்தில் மக்களின் தேவைக்கு ஏற்ப தாவரவியல் பூங்கா, சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகயில் ஆட்டோவை நிறுத்தி இயக்கிவருகின்றனர்.
இந்நிலையில் எல்க்ஹில் என்னும் பகுதி ஆட்டோ ஒட்டுநர்களுக்கும், ஏ.டி.சி. பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கடந்த எட்டு மாதங்களாகவே சவாரி ஏற்றுவதில் தகராறு இருந்துவந்தது. இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எல்க்ஹில் ஆட்டோ ஓட்டுநர்கள் 15 பேர், உதகையில் இயங்கிவந்த ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கத்திலிருந்து பிரிந்து, தனி நலச்சங்கம் தொடங்கி ஆட்டோக்களை இயக்கிவந்தனர். பல நாள்களாகவே பயணிகளை ஏற்றிச்செல்வதில் இரு சங்கத்தினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்.