நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கஞ்சா பயன்படுத்தி வருவதாகவும், அதில் சில மாணவர்கள் அந்த போதை வஸ்துவுக்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன.
போதைக்கு அடிமையாகி மனநிலை பாதித்த கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! - nilgiris police
நீலகிரி: குன்னூரில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தி மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அதற்கு காரணமான கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, நீலகிரி எஸ்.பி. சண்முகப்பிரியா, தனிப்படை அமைத்து அதிரடி சோதனைகள் நடத்தி வந்த நிலையில், குன்னூரில் பாய்ஸ் கம்பெனி பகுதி அருகே அங்கு 10 கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக, தனிப்படை காவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சென்று சோதனை நடத்தியபோது, ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வடிவேலு(39) என்பவரை காவல் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.