தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வருண் சிங்கிற்கு மாணவிகள் அஞ்சலி - குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த ராணுவ வீரர் வருண் சிங், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு குன்னூர் தனியார் கல்லூரி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வருண்சிங்கிற்கு மாணவிகள் அஞ்சலி..!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வருண்சிங்கிற்கு மாணவிகள் அஞ்சலி..!

By

Published : Dec 15, 2021, 7:29 PM IST

நீலகிரி: குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் டிசம்பர் 8 அன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக விபத்து நடந்த அன்றே அறிவிக்கப்பட்டது.

இதில் குரூப் கேப்டன் வருண் சிங் 80 விழுக்காடு தீக்காயத்துடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விமான படை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மாணவிகள் அஞ்சலி

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. இவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்திவந்த நிலையில் விபத்து ஏற்பட்ட குன்னூர் பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அவரின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் இதில் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - சிதைவு பாகங்கள் சேகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details