நீலகிரி: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நீலகிரியில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான வசதிகளை உறுதி செய்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் வாக்கு எண்ணிக்கைக்கான அறைகள், மேஜைகள், முகவர்கள் வந்து செல்லும் வழிகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் அறைகள், வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள் நுழையும், வெளியேறும் வழிகள் ஆகிய முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.