நீலகிரி:ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இன்று (ஆக.28) சுமார் 500 அடி பள்ளத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தொட்டபெட்டா சிகரத்தில் தற்கொலை பாறைகள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அங்கிருந்து நகரைக் காணும் வகையில் அங்குள்ள பாறைகளின் மீது ஏறி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் நடுவே பெண் ஒருவர் பாறை ஒன்றின்மீது ஏறி தற்கொலை செய்வதுபோல் நின்றுள்ளார்.