நீலகிரிமாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் படி காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் இன்று (மே.20) உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலக பிரசித்தி பெற்ற 124 வது மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி: மனைவியுடன் சென்று தொடங்கி வைத்த ஸ்டாலின் பூங்காவில் 1 லட்சம் கார்கேசன் மலர்களை கொண்டு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றம், 20 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்ட 124 வது மலர் கண்காட்சி என்ற வாசகம், மற்றும் செல்பி ஸ்பார்ட் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி: மனைவியுடன் சென்று தொடங்கி வைத்த ஸ்டாலின் இது மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு பழங்குடியினர் உருவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் பூங்கா முழுவதும் 5.5 லட்ச மலர் செடிகளில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பால்சம், லில்லியம், மேரிகோல்டு, டேலியா,பெட்டுனியா உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது.
உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்டாலின் இவை கண்காட்சிக்காக மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 20க்கும் மேற்பட்ட அரங்குகளில் மலர்கள் அலங்காரங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.
உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்டாலின் இதையும் படிங்க: 'அப்படிப்போடு' - பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!