ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது முக்கிய உணவாக உட்கொள்ளக்கூடிய கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி உதகையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் கேக் கலவை நிகழ்ச்சி இதில் உலர்ந்த பழங்களாக பீச், பிளம், திராட்சை போன்றவைகள் கிராம்பு, லவங்கம், பட்டை, ஏலக்காய் போன்ற வாசனை திரவிய பொருள்கள், இவற்றுடன் மதுபானங்களான வையின், ரம், பிராண்டி, விஸ்கி போன்றவற்றைக் கொண்டு 65 கிலோ கேக் கலவையை ஊழியர்கள் தயாரித்தனர்.
இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சியின்போது சுற்றுலாப் பயணிகள் பங்கு பெறுவர். ஆனால் இந்த ஆண்டு கரோனா அச்சம் காரணமாக ஒட்டல் ஊழியர்கள் சமூக இடைவெளிகளுடன் கலந்துகொண்டனர்.
இந்த கேக் கலவை மூடி ஒரு மாதம் வைத்த பிறகு டிசம்பர் 20ஆம் தேதிக்கு மேல் எடுத்து கிறிஸ்துஸ் பிளம் கேக் தயாரிக்கப்பட்டு ஓட்டலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும்.