நீலகிரியில் பல நூறு ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுத்திவருகின்றன. ஆனால் நீலகிரி மாவடத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் சென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி, முதுமலை யானை முகாம் அருகில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள மாணவர்களுக்காக கார்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால், அங்கன்வாடி கட்டிக்கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை கட்டித்தரவில்லை என கூறப்படுகிறது.
அப்பகுதி, குரும்பபடியில் தற்போது பெயரளவில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டுவருகிறது. குரும்பபடி அருகில் உள்ள கார்குடி, மேல்பாடி, கீழ்பாடி பழங்குடியின கிராமத்தில் உள்ள குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப ஆர்வம் காட்டினாலும், குரும்பபாடியில் உள்ள குழந்தைகளுக்கே இடம் போதவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பமுடியாமல் பெற்றோர்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
அங்கன்வாடிக்கு செல்ல ஆர்வம் காட்டும் குழந்தைகள் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தினாலும், பழங்குடியின மக்களின் கல்விக்காக அங்கன்வாடியை கட்டிகொடுத்தால் தங்கள் குழந்தைகளின் கல்வித் தரம் மேம்படுவதோடு, வாழ்க்கைத் தரமும் உயரும் என்பதே பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.