நீலகிரி:உதகையில் நாளை நடைபெறவுள்ள 124ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று கோவையில் இருந்து உதகை புறப்பட்டுச் சென்றார். வழியில் அவருக்கு குன்னூர் பொதுமக்களும், திமுக நிர்வாகிகள் எனப் பலர் லெவல்கிராஸ் பகுதியில் மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குன்னூர் வந்த முதலமைச்சர் "தான் முதலமைச்சராகப் பொறுபேற்ற பின் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறை என்றும், மக்களோடு மக்களாய் இருந்து தங்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்குவதாகவும்” தெரிவித்தார்.