நீலகிரி: கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் வருகை தந்துள்ளார். அவர் குன்னூரின்கீழ் அட்டடியில் செயல்படும் 'இல்லம் தேடி கல்வி மையத்தை' பார்வையிட்டார். அப்போது அவர் திடீரென செல்போன் வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்புகொண்டு, அங்குள்ள தன்னார்வலர் பேசுவதற்கு செல்போனைக் கொடுத்தார்.
இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் - சென்னை
குன்னூரில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் உரையாற்றினார்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர்
அப்போது முதலமைச்சர் தன்னார்வலப்பெண்ணிடம், செல்போனில் இல்லம் தேடி கல்வியைக்குறித்து பல்வேறு கேள்விகளைக்கேட்டு, உரையாற்றி வாழ்த்துகள் தெரிவித்தார். திடீரென அமைச்சர் முதலமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச வைத்த சம்பவம் தன்னார்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் - கனிமொழி